திருவண்ணாமலை காவல் ஆய்வாளர்கள் திடீர் இட மாற்றம்

திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பணிபுரியும் 34 காவல் ஆய்வாளர்கள் வெள்ளிக்கிழமை திடீரென இட மாற்றம் செய்யப்பட்டனர்.
நீண்ட நாள்களாக ஒரே இடத்தில் பணிபுரிபவர்கள், விருப்ப மாறுதல், நிர்வாகக் காரணம் ஆகியவற்றால் காவல் ஆய்வாளர்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இட மாற்றம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர்களின் புதிய பணியிடம் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது.
அதன்படி, விழுப்புரம் மாவட்ட மது விலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் எஸ்.நாகராஜன் (வேட்டவலம் காவல் நிலையம்), விழுப்புரம் மாவட்டம், செஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் சி.பூபதி (மேல்செங்கம் காவல் நிலையம்), வேலூர் மாவட்டம், குடியாத்தம் டவுன் ஜி.மதியரசன் (தண்டராம்பட்டு), தண்டராம்பட்டு எம்.டி.இருதயராஜ் (குடியாத்தம் டவுன்), நாட்றாம்பள்ளி எம்.முரளிதரன் (தேசூர்), வாணியம்பாடி டவுன் எஸ்.ராஜசேகரன் (திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையம்), செங்கம் ஆர்.பழனி (வேலூர் மாவட்டம், கந்திலி), கீழ்கொடுங்காலூர் ஆர்.சின்னராஜ் (போளூர் மது விலக்கு அமல் பிரிவு) ஆகியோர் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல, குடியாத்தம் மது விலக்கு அமல் பிரிவு கே.நிலவழகன் (செங்கம்), பானாவரம் ஆர்.ரமேஷ் (பெரணமல்லூர்), வேட்டவலம் எஸ்.கோவிந்தசாமி (கலவை), மேல்செங்கம் டி.சாந்தலிங்கம் (நாட்றாம்பள்ளி), திருப்பத்தூர் தாலுகா வி.இ.செந்தில் (பானாவரம்), திருவண்ணாமலை கிழக்கு ஆர்.எஸ்.பார்த்தசாரதி (ஆற்காடு), திருவண்ணாமலை மது விலக்கு அமல் பிரிவு கே.மங்கையர்க்கரசி (செய்யாறு), செய்யாறு கே.காண்டீபன் (சோளிங்கர்), போளூர் கே.ராமமூர்த்தி (பள்ளிகொண்டா), வாணியம்பாடி மது விலக்கு அமல் பிரிவு எஸ்.உலகநாதன் (திருப்பத்தூர் தாலுகா), ஆற்காடு தாலுகா எஸ்.செந்தில்குமார் (வாணியம்பாடி மது விலக்கு அமல் பிரிவு) ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் கே.சாந்தி (திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையம்), கந்திலி ஐ.கோபாலகிருஷ்ணன் (திருவண்ணாமலை மது விலக்கு அமல் பிரிவு), வேலூர் என்.கருணாநிதி (திருப்பத்தூர் மது விலக்கு அமல் பிரிவு), போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் எஸ்.மகாலட்சுமி (வேலூர்), போளூர் மது விலக்கு அமல் பிரிவு வி.ராணி (போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையம்), கடலூர் மாவட்டம், அண்ணாமலை நகர் எஸ்.ரமேஷ்ராஜ் (குடியாத்தம் மது விலக்கு அமல் பிரிவு), காட்பாடி என்.சுரேஷ்பாபு (போளூர்), பெரணமல்லூர் பி.புஷ்பலதா (தீவிர குற்ற தடுப்புப் பிரிவு), பள்ளிகொண்டா எஸ்.முருகன் (வாணியம்பாடி டவுன்) ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் கே.மலர்கொடி (ஆலங்காயம்), செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் கே.சாந்தி (திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையம்), தேசூர் எம்.வைலட் (செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம்), கலவை கே.வெங்கடேசன் (திமிரி), ஆலங்காயம் டி.பாண்டி (காட்பாடி), வேலூர் மது விலக்கு அமல் பிரிவு பி.பழனி (வேலூர் தாலுகா), வேலூர் தாலுகா ஏ.டி.ராமச்சந்திரன் (வேலூர் மது விலக்கு அமல் பிரிவு) ஆகியோர் இட மாற்றம் செய்யப்பட்டனர். இட மாற்றம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர்கள் உடனே புதிய பணியிடத்தில் சேர வேண்டும் என்று வேலூர் சரக டிஐஜி ஆர்.தமிழ்ச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!