கால்நடைகளுக்கு கோமாரி நோய் இலவசத் தடுப்பூசி

திருவண்ணாமலை மாவட்டத்தில் மார்ச் 21 ஆம் தேதி வரை கால்நடைகளுக்கு கோமாரி நோய் இலவசத் தடுப்பூசி போடப்படும் என மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டத்தில் மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி வரும் 21-ஆம் தேதி வரை கால்நடைகளுக்கு கோமாரி நோய் இலவச தடுப்பூசி போடும் பணி நடைபெறும். இதில், 4 மாத கன்றுகள் முதல் அனைத்து பசுக்கள் மற்றும் எருமைகளுக்கு இந்தத் தடுப்பூசி போடப்படும். இதற்கென 75 கால்நடை மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாவட்டத்தில் 7.16 லட்சம் கால்நடைகளுக்கு இந்தத் தடுப்பூசி போடப்பட உள்ளது.
எனவே, மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் இந்தத் தடுப்பூசி போடப்படும் நாள்களில் பொதுமக்கள் தங்களது கால்நடைகளுக்கு தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!