பொதுத்தேர்வு எழுத உள்ள திருவண்ணாமலை மாவட்ட மாணவர்களின் ஆலோசனைக்காக இலவச எண்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் மார்ச் 2017 அரசு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு மன அழுத்தத்தைப் போக்கவும், உளவியல் ஆலோசனைகள் வழங்கி, குறைகளை உடனுக்குடன் சரி செய்யவும், தேர்வு சார்ந்து போதுமான ஆலோசனைகளை வழங்கவும் கட்டணமில்லா தொலைபேசி வசதி செய்யப்பட்டுள்ளது.

இதைப்பயன்படுத்தி, 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பாடம் சார்ந்து தமக்கு இருக்கும் ஐயங்களைப் போக்கிக்கொள்ளலாம். இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள எண் 1800-121-7030 .

இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அரசுப் பொதுத் தேர்வு எழுத உள்ள மாணாவர்கள் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறவும், அதிக மதிப்பெண்கள் பெற்று வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ளவும், திருவண்ணாமலை மாவட்டத்தை மாநில அளவில் முன்னிலை பெறச் செய்யவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!