பிருதூர் கிராமம் முத்துமாரியம்மன் கோயிலில் நகை திருட்டு

வந்தவாசி அருகே கோயிலின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

வந்தவாசியை அடுத்த பிருதூர் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் திங்கள்கிழமை மாலை பூஜை முடிந்த பின்னர், கோயில் கதவை பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், அம்மன் கழுத்திலிருந்த 5 பவுன் தங்க நகையை திருடிச் சென்றனர். இதுகுறித்து
வந்தவாசி வடக்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!