அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் பயிற்சி முகாம்

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் இலக்கை அடைவதற்கான எளிய வழிமுறைகள் குறித்த பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் பி.முனிரத்தினம் தலைமை வகித்தார். கல்லூரி நுண்ணுயிரியல் துறைத் தலைவர் கே.ஜெகதி வரவேற்றார்.
இலக்கை அடைவதற்கான எளிய வழிமுறைகள் குறித்து திருவண்ணாமலை பிரம்மகுமாரிகள் சங்க சிறப்புப் பயிற்சியாளர் உமா மாணவிகளுக்கு விளக்கிக் கூறினார்.
கல்லூரிச் செயலர் எம்.ரமணன், கல்லூரி முதல்வர் எம்.ஓ.எச்.முகமதுயாகூப், அரிமா சங்க மாவட்ட முன்னாள் ஆளுநர் வி.எஸ். தளபதி, வந்தவாசி பிரம்மகுமாரிகள் சங்க நிர்வாகி சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லூரி இயற்பியல் துறைத் தலைவர் எஸ்.செல்வகுமார் நன்றி கூறினார்.

One thought on “அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் பயிற்சி முகாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!