வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர் நிகழ்த்திய "முப்பெரும் விழா"

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர் நிகழ்த்திய “முப்பெரும் விழா” (மாணவர்களுக்கான சிந்தனை சிற்பி விருது வழங்கும் விழா, 17ஆம் ஆண்டு விழா, கலை இலக்கிய விழா) நிகழ்வு பாலாம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்பு நிகழ்த்தினார். திருவண்ணாமலை டாக்டர் கெங்குசாமி நாயுடு மெட்ரிக் மேல்நிலை பள்ளி தலைவர் திரு. மா. சின்ராஜ் தலைமை வகித்தார். மருதாடு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.ராமகிருஷ்ணன், திரு. கோட்டை பாபு, யுரேகா கல்வித் திட்டம் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மு. முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ். அம்பேத்குமார் MLA அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ” சிந்தனை சிற்பி விருது ” மற்றும் “சான்றிதழ்” வழங்கினார். மேலும் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு இலவச கற்பித்தல் மேம்பாட்டிற்கு ஊக்கத் தொகையாக ரூபாய் 10,000 /-வழங்கி சிறப்புரையாற்றினார்.

மாணவ..மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் இந்நிகழ்ச்சியில் வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் அ.மு.உசேன், இந்தியன் டிஜிட்டல் நிறுவனர் வந்தை. பிரேம் , பெருங்கட்டுர் அ.மே. பள்ளி மு.க.ஆசிரியர் பா.கோபிகிருஷ்ணன், SRM கணினி மைய நிறுவனர் எ. தேவா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மைய ஆசிரியர் எ. ராஜா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!