வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டரில் 68 ஆவது குடியரசு தினவிழா

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டரில் 68 ஆவது குடியரசு தினவிழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை தாங்கினார். வந்தவாசி TMB வங்கியின் மேலாளர் திரு. ராஜன் பாபு அவர்கள் முன்னிலை வகித்தார். வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்க தலைவர் திரு. அ.மு. உசேன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ” இந்தியாவும் குடியரசும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். மாணவ… மாணவிகளின் பேச்சுப்போட்டிகள் நடைபெற்று புத்தகப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் ஆசிரியர்கள் செல்வராஜ், பூபாலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கலை ஆசிரியர் பெ. பார்த்திபன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!