4-வது நாளாக வந்தவாசியில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்போராட்டம்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
அலங்காநல்லூரில் தொடங்கிய அறவழி போராட்டம், சென்னை மெரினாவில் எதிரொலித்து உலக முழுவதில் இருந்தும் ஆதரவை பெற்றிருக்கிறது. வந்தவாசி நகரில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நான்கு நாட்களாக இரவு பகல் கடந்து நடத்தி வரும் அறவழிப்போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர். போராட்டத்தில் பீட்டாவிற்கு பாடைகட்டி ஊர்வலமாகவும், தமிழரின் பாரம்பரிய விளையாட்டு மூலமும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!