வந்தவாசி போரும் வரலாறும்

வந்தவாசி போரும் வரலாறும்
———————————-
பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டிற்கும் பிரிட்டன் நாட்டிற்கும் இடையே ஆசியாவை கைப்பற்றும் முயற்சியில் மிகப்பெரிய போர் நடந்தது. இந்த கால கட்டத்தில் மூன்றாவது கர்நாடக போர் என்ற பெயரில் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து போர் நடந்து வந்தது. இந்த போர் 1756 முதல் 1763 வரை நடைபெற்றது. இதில் 1760 ஆம் ஆண்டு வந்தவாசி கோட்டையை கைப்பற்ற இரு நாடுகளும் மோதிக்கொண்டன. வரலாற்று ஆசிரியர்கள் இந்த போரை மூன்றாம் கர்நாடகப் போர் என்வும் குறிப்பிடுகின்றனர். இந்தப்போரோடு இந்தியாவில் பிரஞ்சு ஆதிக்கம் முடிவுக்கு வருகிறது.

1761-ல் இந்த போரில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த சர் அயர் கூட் தலைமையிலான படை, பிரான்சு நாட்டை சேர்ந்த ஜெனரல் லாலி தலைமையிலான படையை தோற்கடித்தது. இந்த வெற்றி பிரிட்டன் நாட்டின் மாபெரும் வெற்றிக்கு வழி வகுத்தது. பிரிட்டன் அரசாங்கம் இந்தியாவில் காலுான்ற காரணமானது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது வந்தவாசி. சட்டமன்ற தொகுதியான இங்கு இதுவரை ஆண்டு வந்த, ஆண்டு வருகின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதியின் வளர்ச்சிக்கோ அல்லது வரலாற்றை பாதுகாக்கவோ தவறிவிட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். வந்தவாசி மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே.

வந்தவாசியை சுற்றி பல கிராமங்கள் உள்ளன. அடிப்படை வசதிகளான சாலை வசதி, பேருந்து வசதி, குடிநீர், சுகாதாரம், நூலகம், கல்வி வளர்ச்சி இல்லை. வந்தவாசி பழைய பேருந்து நிலையம் பல ஆண்டுகளுக்கு மேலாக சுகாதரமற்ற நிலையில்தான் துர்நாற்றம் வீசிக்கொண்டு இருக்கிறது.

வந்தவாசி கோட்டையிலிருந்து செஞ்சிக் கோட்டை வரை சுரங்கப் பாதை இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த சுரங்கப் பாதைகள் காலப் போக்கில் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அழிந்து விட்டதாக கூற படுகிறது. தற்போது கோட்டையில் மிஞ்சி இருப்பது சில பகுதிகள் மட்டுமே.
மக்கள் ஆக்கிரமிப்பால் பெரும்பாலான கோட்டை அழிந்துவிட்டது. ஆனால் இப்போதும் கோட்டைக்குள் நுழைந்தால் பழங்காலத்து கத்தி, போர் உடைகள், குதிரை கடிவாளம், பீரங்கி குண்டுகள் போன்ற ஏராளமான பொருட்கள் கிடைப்பதாக கூறப் படுகின்றது. மேலும் இந்த கோட்டையின் சுரங்கத்தினுள் புதையல்கள் இருக்க கூடும் எனவும் மக்கள் நம்புகின்றனர்.

வீர ஆஞ்சநேயர் கோவில் கோவில் அமைவிடம் வந்தவாசி கோட்டையின் நுழைவு வாயில் ஆகும். வந்தவாசி கோட்டை மிகவும் சேதம் அடைந்துவிட்ட நிலையிலும் இந்த வீர ஆஞ்சநேயர் கோவில் மட்டும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோவில் பக்கத்தில் பழங்காலத்தில் மன்னர்களாலும் பிரிட்டனாலும் உபயோகிக்கப்பட்ட பீரங்கி ஒன்றும் உள்ளது. கோவிலும் பீரங்கியும் தற்போது அறநிலையத் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

வந்தவாசி போர் பற்றிய வரலாறவது எதிர்காலத்தில் ஆவணங்களில் இருக்குமா என்பது சந்தேகமே? நமது பண்பாடும், நாகரிகம், கலை பாதுகாக்கப்படுமா என்ற ஐயம் அனைவரது கேள்வியாக உள்ளது.

அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள் எதிர்பார்க்காமல் தற்போது இருக்கும் நிலையில் வந்தவாசி உள்ள பொது அமைப்புகளும் தன்னார்வலர்களும் இணைந்து இதற்கு ஓர் தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு…

2 thoughts on “வந்தவாசி போரும் வரலாறும்

 • January 22, 2017 at 11:30 am
  Permalink

  My wishes to vandavasi people. Plassey nicer por allavu vandavasi por pesapadavillai. But all the three happened in between 1757 to 1764. Vandavasi irrandu por Kallu kum naduvil1760. Il. Naduvil nadanthathu. Naduvalliyilvittu vittarkal. But Aathar kaga nam ammaithiyaga irruga kudathu. Nam perumaiyai yarum solvatharkku munn. Nam uraka sollu on

  Reply
 • January 22, 2017 at 11:31 am
  Permalink

  Plaasypor. Buxer por.

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!