புகைப்படக் கலைஞர்கள் சங்க பொங்கல் விழா

வந்தவாசி வட்ட புகைப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பில், வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தில் உள்ள மன்னார்சாமி சமேத பச்சையம்மன் கோயிலில் வியாழக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது.

விழாவுக்கு சங்கத் தலைவர் ஆர்.நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். சங்கச் செயலர் ஆர்.கணேசன், சங்க கௌரவத் தலைவர் எம்.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கமும் சமத்துவமும் என்ற தலைப்பில் பட்டிமன்றப் பேச்சாளர் மழையூர் வீ.தமிழரசன் சிறப்புரை ஆற்றினார்.
திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நேரடி இணைய ஒளிபரப்பு செய்வது எப்படி என்பது குறித்து ஆரணி கஜேந்திரன் விளக்கம் அளித்தார். பின்னர், சங்க உறுப்பினர்கள் புதுப்பானையில் சமத்துவ பொங்கலிட்டனர். சங்கப் பொருளர் சு.இரவி நன்றி கூறினார்.
மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!