கோவில் உண்டியல் கொள்ளை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே புதிய குயிலம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த, மூன்று மாதங்களுக்கு முன் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் செலுத்திய காணிக்கை, ஏற்கனவே அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்ட, மூன்று பவுன் தங்க நகை மற்றும், 50ஆயிரம் ரூபாய் அளவுக்கு உண்டியலில் இருந்தது. இந்நிலையில், கோவில் பூசாரி அருண் நேற்று முன்தினம் இரவு கோவில் நடையை சாத்தி பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை கோவிலை திறக்க வந்தபோது, கோவில் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவிலினுள் சென்று பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த, மூன்று பவுன் தங்க நகை, பக்தர்கள் செலுத்திய காணிக்கை சிறிய அளவிலான நகைகள், மற்றும் வெள்ளி நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து, புதுப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!