வந்தவாசி (தனி)

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம் :திருவண்ணாமலை

வாக்காளர்கள் :222362

ஆண் :111420
பெண்:110939
திருநங்கை:3

சட்டமன்ற உறுப்பினர்

எஸ். அம்பத் குமார் தி.மு.க. வந்தவாசி (தனி) 80206

வி. மேகநாதன் அ.தி.மு.க. வந்தவாசி (தனி) 62138

2011-2016’ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

வந்தவாசி-காஞ்சீபுரம் சாலை விளாங்காடு கூட்டு சாலையிலிருந்து உத்திரமேரூர் சாலை வரை ரூ.18 3/4 கோடி செலவில் சாலை அமைக்கப்பட்டது. வழூர் கிராமத்தில் சுகநதி ஆற்றின் மீது ரூ.3 கோடியே 57 லட்சம் செலவில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. முறுக்கேரி கிராமத்தில் ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் சாலையில் மேம்பாலம் கட்டப்பட்டது. தென்னாங்கூர் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.8 1/4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இக்கல்லூரிக்கு ரூ.1 கோடியே 45 லட்சம் செலவில் மாணவர் விடுதி கட்டி திறக்கப்பட்டுள்ளது.

வந்தவாசி புதிய பஸ் நிலையம் அருகில் ரூ.5© கோடி செலவில் அடுக்குமாடி கட்டிடங்கள், வந்தவாசி நகராட்சி பகுதிக்கு 3-வது குடிநீர் திட்டம் ரூ.13 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வந்தவாசி-வெண்குன்றம் கிராமத்தில் மலை மீது உள்ள தவளகிரீஸ்வரர் கோவிலுக்காக மலை அடிவாரத்தில் பக்தர்கள் தங்கும் விடுதி, மலை மீது பாதுகாப்பு கம்பி அமைக்க ரூ.65லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

கீழ்கொடுங்காலூர் -அரசாணிமங்கலம் வரையில் ரூ.3 கோடியே 35லட்சம் செலவில் புதிய சாலை, சட்டத்தாங்கல்- கோழிப்புலியூர் கிராமம் வரை ரூ.7 கோடி செலவில் சாலை, வந்தவாசி காந்தி சாலையில் ரூ.1 கோடியே 27லட்சம் செலவில் சிமெண்டு சாலை ஆகியவை அமைக்கப்பட்டது. மாம்பட்டு கிராமத்தில் ரூ.70லட்சம் செலவில் புதிய துணை மின்நிலையம் அமைக்கப்பட்டது. வந்தவாசியில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டன. – எம்.எல்.ஏ. வே.குணசீலன்

வேட்பாளர்கள் பட்டியல்

எஸ். அம்பத் குமார் தி.மு.க.

வி. மேகநாதன் அ.தி.மு.க.

வடிவேல் ராவணன் பா.ம.க.

ஆர். மேத்தா விடுதலை சிறுத்தைகள்

ஜே. சுதா இ.ஜ.க.

நீலகண்டன் நாம் தமிழர் கட்சி

முந்தைய தேர்தல் முடிவுகள்

தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

பா.ம.க. 1 முறை வென்றுள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!