திருவண்ணாமலை மாவட்டத்தில், ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில், ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்’ என, எஸ்.பி., பொன்னி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டத்தில், ஊர்க்காவல் படைக்கு செய்யாறு, வந்தவாசி பகுதிகளில் இருந்து மட்டும், 55 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு, அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தன்னார்வ தொண்டு செய்ய விருப்பம் உள்ளவர்கள் மற்றும் சேவை மனப்பான்மை கொண்ட, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு ஊக்கத் தொகையாக, நாள் ஒன்றுக்கு, 150 ரூபாய் வீதம் சராசரியாக மாதம், 25 நாட்களுக்கு பணி செய்யும் நாட்களை கணக்கிட்டு ஊதியம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும், 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள், செய்யாறு, வந்தவாசியில் உள்ள துணைக்காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும், திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்திலும் கிடைக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!