உள்ளாட்சி தேர்தல் தேதி 22-ந்தேதி அறிவிக்க வாய்ப்பு

உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக் காலம் அடுத்த மாதம் 24-ந்தேதியுடன் முடிகிறது. புதிய உறுப்பினர்கள் 25-ந்தேதி பதவி ஏற்க வேண்டும்.

இதற்காக தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. சட்டசபை தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை மையமாக வைத்து வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரித்து வைக்கப்பட்டுள்ளது.

தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டு வருகிறது. இதில் பெயர் விடுபட்டவர்கள் தங்களது பெயர்களை சேர்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் பெண்கள் போட்டியிட 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுவதால் எந்தெந்த வார்டுகள் பெண்களுக்கு செல்கிறது என்பது இதுவரை சஸ்பென்சாக உள்ளது.

பெண்கள் போட்டியிடும் வார்டுகள் பிரிக்கப்பட்டு பட்டியல் தற்போது தயார் நிலையில் உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கும்போது இந்த பட்டியலையும் வெளியிட ஏற்பாடு நடந்து வருகிறது.

அரசு துறை சம்பந்தப்பட்ட ஏராளமான திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா கோட்டையில் நாளை காலை தொடங்கி வைக்கிறார். எனவே நாளை மறுநாள் (22-ந்தேதி) உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!