வந்தவாசி நகராட்சிக்கு குப்பைத் தொட்டிகள்: ரோட்டரி சங்கத்தினர் வழங்கினர்

வந்தவாசி நகர ரோட்டரி சங்கம் சார்பில் தூய்மை வந்தவாசி நகரம் திட்டத்தின்கீழ் வந்தவாசி நகராட்சிக்கு குப்பைத் தொட்டிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு ரோட்டரி சங்க மாவட்ட முன்னாள் ஆளுநர் வி.ராஜாசீனிவாசன் தலைமை வகித்தார். வந்தவாசி வட்டாட்சியர் எஸ்.முருகன், நகர்மன்றத் தலைவர் எல்.அப்சர் லியாகத், ஆணையர் லட்சுமி, ரோட்டரி சங்க சிறப்புப் பிரதிநிதி டாக்டர் எஸ்.குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வந்தவாசி நகர ரோட்டரி சங்கத் தலைவர் ஆர்.சுரேந்திரன் வரவேற்றார்.

இதில், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் கலந்துகொண்டு, நகராட்சிக்கு குப்பைத் தொட்டிகளை வழங்கிப் பேசினார். விழாவில் 50 குப்பைத் தொட்டிகள் நகராட்சிக்கு வழங்கப்பட்டன. இந்த குப்பைத் தொட்டிகள் நகரின் முக்கிய வீதிகளில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வைக்கப்பட உள்ளன.

அரிமா சங்க மாவட்ட முன்னாள் ஆளுநர் வி.எஸ்.தளபதி, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி நகர ரோட்டரி சங்கச் செயலர் எ.எஸ்.எ.ரவி, பொருளர் டி.ரங்கநாதன், பயிற்சியாளர் ஜி.சந்தானம் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

One thought on “வந்தவாசி நகராட்சிக்கு குப்பைத் தொட்டிகள்: ரோட்டரி சங்கத்தினர் வழங்கினர்

  • ஜூலை 22, 2016 at 7:40 காலை
    Permalink

    LIKES THIS

    Reply

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!