வந்தவாசி காந்தி சாலையில் மதுக் கடையை மீண்டும் திறக்க எதிர்ப்பு

வந்தவாசியில் மதுக் கடை முன் பிள்ளையார் சிலை அமைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வந்தவாசி காந்தி சாலையில் மதுக் கடையை மீண்டும் திறக்க எதிர்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதி பொதுமக்கள் மதுக் கடை முன் புதன்கிழமை அதிகாலையில் தற்காலிக பீடம் அமைத்து அதன் மீது பிள்ளையார் சிலையை வைத்தனர். இதனையறிந்த கடை உரிமையாளர் தரப்பினர் பிள்ளையார் சிலையை அங்கிருந்து அகற்றி சாலையோரம் வைத்துவிட்டு தற்காலிக பீடத்தையும் இடித்து சேதப்படுத்தியுள்ளார்.
தகவலறிந்த அந்தப் பகுதி பொதுமக்கள், மாணவ, மாணவிகள் புதன்கிழமை காலை பிள்ளையார் சிலையுடன் அந்தக் கடை முன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, மதுக் கடையை மீண்டும் திறக்கக் கூடாது என்றும், பிள்ளையார் சிலையை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். வந்தவாசி டிஎஸ்பி பொற்செழியன், வந்தவாசி தெற்கு காவல் ஆய்வாளர் கௌரி உள்ளிட்ட போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்ததன்பேரில், பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் காந்தி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!