குழந்தை கடத்தல்: வதந்திகளை பரப்பாதீர்

வாட்ஸ் அப் பயன்படுத்தும் அறிவாளிகளே.. உங்கள் சமூக அக்கறையை வெளிப்படுத்தும் முன் உங்களுக்கு வந்த வாட்ஸ் அப் தகவல்கள் உண்மைத்தன்மை வாய்ந்ததா என்று அறிய முயலுங்கள்.

வட மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் குழந்தை கடத்தல்காரர்கள் ஊடுருவி இருப்பதாகவும், எச்சரிக்கையாக இருக்குமாறும் தகவல்கள் பரவி வருகிறது.

இதுநாள் வரை குழந்தை கடத்தப்பட்டதாக திருவண்ணாமலை மாவட்டத்தில் புகார் ஏதும் வரவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆனால், கடந்த சில நாட்களாக வடமாநிலத்தவர், வெளியூர்க்காரர்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர், திருநங்கைகதிருநங்கைகள் என அப்பாவிகள் பலர் கிராம மக்களால் தாக்கப்படுகின்றனர்.

ஊருக்குள் வருபவர்களை கண்காணித்து சந்தேகம் இருப்பின் காவல்துறையிடம் தெரிவியுங்கள். அதைவிடுத்து தாங்களாகவே சட்டத்தை கையில் எடுத்து, கொன்றுவிடுவது நியாயமாகுமா.?

போளூரில் கோவிலுக்கு வந்தவர்களை சந்தேகப்பட்டு தாக்கிய சம்பவத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்திருப்பது கொடூரமானது. இதை செய்த கிராமத்தவர்கள் 20க்கும் மேற்பட்டோரை கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

போளூரில் தாக்கப்பட்டது அப்பாவிகள் என்று ஊடகங்களில் செய்தி வெளியான பிறகும், வாட்ஸ் அப்பில் தாக்கப்பட்டவர்களின் புகைப்படத்தோடு குழந்தை கடத்தல்காரர்கள் பிடிபட்டனர் என்று பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வந்தால் அதை மற்றவர்களுக்கு பகிரும் முன் அதன் தாக்கத்தை ஒரு நிமிடம் யோசியுங்கள்.

உங்கள் வீட்டு குழந்தை தெருவுக்கு வந்து விளையாடிக்கொண்டிருந்தால் சாலையில் போகும் வாகன ஓட்டிகள் என்ன செய்யவேண்டும்..? அல்லது நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!