‘சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்வோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

‘சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்வோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, கலெக்டர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை மாவட்டத்தில், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிபவர் மீதும், சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்வோர் மீதும், நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகளில், கருத்தடை மாத்திரைகளை சட்ட விரோதமாக விற்பது, மருந்துக் கடைகளில் சட்ட விரோதமாக ஊசி போடுவோர், போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் மருந்துக் கடைகளுக்கு வருவாய்த் துறையினர், ‘சீல்’ வைப்பர். திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், கருத்தடை மாத்திரைகள், நவீன கருக்கலைப்பு சிகிச்சை முறைகள், இலவசமாக அளிக்கப்படுகிறது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!