இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம்

“ரோட்டரி கிளப் வந்தவாசி டவுன்” மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், திருவண்ணாமலை “ஸ்ரீ ரமண மகரிஷி கண் மருத்துவமனை” இணைந்து புதன்கிழமை பெரனமல்லூர் தாலுக்கா, செப்டாங்குளம் கிராமம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் “இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம்” மிகச்சிறப்பாக நடைபெற்றது. 
இச்சிறப்பு முகாமில் Rtn.எ.எஸ்.எ.இரவி,தலைவர், ரோட்டரி கிளப் வந்தவாசி டவுன் அவர்கள் தலைமை வகித்தார். திருவண்ணாமலை “ஸ்ரீ ரமண மகரிஷி கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம்” சார்ந்த கண் மருத்துவர்.ஆர்.ராதிகாரவிச்சந்திரன் மற்றும் அவர்கள் மருத்துவ குழுவினர்களுடன் வருகைபுரிந்து குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கண்சம்பந்தப்பட்ட நோய்களுக்கு கண்பரிசோதனைகள் மேற்கொண்டு மருந்து மாத்திரைகள் மற்றும் கண்கண்ணாடி ஆலோசனைகளும் சிகிச்சையும் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது. முகாமில் மொத்தம் 120 நூற்றுஇருபது நபர்களுக்கு  கண்பரிசோதனை செய்யப்பட்டு 18 நபர்களுக்கு கண்புறை நீக்கி அருவைசிகிச்சை முற்றிலும் இலவசமாக செய்ய தம் மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டனர்.
  மேலும் “ரோட்டரி கிளப் வந்தவாசி டவுன்” செயலாளர் ச.முருகானந்தம், பொருளாளர் நா.சுரேஷ்பாபு, இயக்குனர்கள் டி.ஆர்.தனசேகரன், ப.ஆனந்தன், பா.தரணிதரன் வி.வெங்கடேசன், பி.ஆர்.மணிவேல் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர்கள் தனபால், தேவராஜ், ஏழுமலை, துரை, ஏ.மேத்தியூ, சின்னசாமி, சீனுவாசன் பலரும் முகாமில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!