திருவண்ணாமலை மாவட்டத்தில் அசோக சக்ரா விருதுக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அசோக சக்ரா விருதுக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
வீர, தீரச் செயல்கள் புரிந்தவர்களுக்கு 2018-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் அசோக சக்ரா விருது வழங்கப்பட உள்ளது. வீர, தீரச் செயல்கள் புரிந்தவர்கள், சுய தியாகம் புரிந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. பாதுகாப்புப் படையினர், காவல் துறையைச் சேர்ந்தவர்கள், மத்திய ஆயுதக் காவல் படையினர், ரயில்வே பாதுகாப்புப் படையினர், பொதுமக்கள் ஆகியோர் இந்த விருதுக்கு தகுதியுடையவர்களாவர்.திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த விருதுக்கு தகுதியுடையோர் விண்ணப்பித்துப் பயன்பெறலாம். விண்ணப்பதாரர்கள் ஆபத்தான நிகழ்வுகளில் தாங்கள் மேற்கொண்ட வீர, தீர நடவடிக்கைகளின் தன்மையைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பத்துடன் நிகழ்வுகள் குறித்து முதல் தகவல் அறிக்கை, காவல் துறையால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஆதாரங்கள், உரிய ஆவணங்கள், சுய விவரம், புகைப்படங்களை இணைத்து அனுப்ப வேண்டும். இந்த விரிவான அறிக்கையுடன் கூடிய விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 2-ஆவது தளம், வேங்கிக்கால், திருண்ணாமலை என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!