வந்தவாசி கிளை நூலகத்தில் சிறப்பு புத்தகக் கண்காட்சி

உலக புத்தக தினத்தையொட்டி, வந்தவாசி நூலக வாசகர் வட்டம் சார்பில், சிறப்பு புத்தகக் கண்காட்சி வந்தவாசி கிளை நூலகத்தில் சனிக்கிழமை தொடங்கியது.
விழாவுக்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் மு.முருகேஷ் தலைமை வகித்தார். இரா.சிவக்குமார் முன்னிலை வகித்தார். கிளை நூலகர் பூ.சண்முகம் வரவேற்றார்.தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் வந்தவாசி கிளை மேலாளர் இரா.ராஜன்பாபு புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடக்கி வைத்தார்.
விழாவில் கிளை நூலகர்கள் க.மோகன், ஜா.தமீம், நூலக உதவியாளர் பு.நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த புத்தகக் கண்காட்சியில் பல்வேறு பதிப்பகங்களைச் சேர்ந்த இலக்கியம், அறிவியல், சிறுவர் நூல்கள், சமுதாயம், வரலாறு உள்ளிட்ட நூல்கள் இடம்பெற்றுள்ளன. புத்தகக் கண்காட்சி வரும்
28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!