திருவண்ணாமலையில் இன்று மக்கள் நீதிமன்ற முகாம்

திருவண்ணாமலையில் இன்று (ஏப்ரல் 22) நடைபெறும் தேசிய மெகா லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) முகாமில், போக்குவரத்துக் கழக விபத்து இழப்பீடு தொடர்பான வழக்குகளுக்கு தீர்வு
காண விரும்புவோர் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
திருவண்ணாமலையில் மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், ஞாயிற்றுக்கிழமை மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட உள்ளது. இதில், மோட்டார் வாகன விபத்துகளில் இழப்பீடுகள், ஆலோசனைகள், பணி மற்றும் ஓய்வூதியப் பலன்கள், போக்குவரத்துக் கழகங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு சமரசத் தீர்வு காணப்பட உள்ளது.காலை 10 மணி முதல் திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தொடர்பாக திருவண்ணாமலை மண்டல போக்குவரத்துக் கழகத்தை 9443988990 என்ற எண்ணில் மனுதாரர்கள் தொடர்பு கொள்ளலாம்.
இந்த மக்கள் நீதிமன்றத்தில் போக்குவரத்துக் கழகம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!