திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடங்குகிறது. விடைத்தாள் திருத்தும் பணியில் 1,600 ஆசிரியர்கள் ஈடுபடுகின்றார்கள் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் பிளஸ்2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி தொடங்கி கடந்த 6ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்தநிலையில் தேர்வுகள் நிறைவடைந்ததையொட்டி பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கனா தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 16ம் தேதி வெளியிடப்பட உள்ளதகா அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 11ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தம் செய்யும் பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் செய்ய திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் சிஷ்யா மெட்ரிக் பள்ளி, போளூர் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியும், செய்யாறு கல்வி மாவட்டத்தில் வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என மாவட்டத்தில் 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இம்மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடங்குகிறது.விடைத்தாள் திருத்தும் பணி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் உஷாராணி, கிருத்திகா ஆகியோர் ேமற்பார்வையில் 1,600 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!