தமிழக பட்ஜெட் 2018-19

தமிழக அரசின் 2018-19-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சரமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் இன்று தாக்கல் செய்தார்

பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்திற்கு ரூ.1,244.35 கோடி ஒதுக்கீடு

சென்னை மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளில் ரூ.14.84 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்; பேரூராட்சிகளில் 400 கிலோ மீட்டர் சாலைகள் ரூ.200 கோடியில் தரம் உயர்த்தப்படும்

நலிவடைந்த, குறைந்த வருவாய் உடைய மக்களுக்கு வீடுகள் கட்ட ரூ.2,894.63 கோடி ஒதுக்கீடு: வீட்டு வசதி வாரியம் மூலம் ஏழை,எளிய மக்களுக்கு 20,095 வீடுகள் கட்டப்படும்

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1,975.07 கோடி ஒதுக்கீடு: நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1,877.01 கோடி பகிர்ந்தளிக்கப்படும்

பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்க ரு.250 கோடி ஒதுக்கீடு

கைத்தறி, துணி நூல், கைவினை, கதர் துறைக்கு ரூ.1,468.18 கோடி ஒதுக்கீடு; 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கைத்தறித்துறைக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு

தொழில் முதலீட்டாளர்களுக்கு உதவித்தொகை மானியம் ரூ.1,600 கோடியில் இருந்து ரூ.2,000 கோடியாக உயர்வு; தொழில் முதலீட்டாளர்களுக்கு கூடுதலாக 9030 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு

முதலாம் முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ.62,738 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது: தொழில் முதலீட்டாளர்களுக்கு உதவித்தொகை மானியம் ரூ.1,600 கோடியில் இருந்து ரூ.2,000 கோடியாக உயர்வு

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்துக்காக ரூ.1361.60 கோடி ஒதுக்கீடு

சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறைக்கு 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.11638 கோடி நிதி ஒதுக்கீடு

வேலைக்குச் செல்லும் இஸ்லாமிய பெண்களுக்கு அரசு உதவியுடன் விடுதிகள் கட்டப்படும்: எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.587 கோடி ஒதுக்கீடு

சிறு, குறு, நடுத்தர நிறுவன துறை பணியாளர்களுக்கு அரசு, தனியார் பங்களிப்புடன் விடுதி அமைக்கப்படும்; அம்பத்தூர் தொழிற்பேட்டையில் குறு நிறுவனங்களுக்கு ரூ.30 கோடியில் பன்னடுக்கு பணிமனைகள் அமைக்கப்படும்

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க ரூ.758 கோடி நிதி ஒதுக்கீடு

முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் கடன் ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்வு

ஊரக வளர்ச்சித்துறையின் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு: அம்ருத் திட்ட பணிகள் மேற்கொள்ளப்படாத நகரங்களில் பணிகளை செயல்படுத்த ரூ.750 கோடி ஒதுக்கீடு

தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் ரூ.4975.52 கோடியில் தனிநபர் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன; தற்போது 19.42 லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டு வருகின்றன

தூய்மை இந்தியா இயக்கத்திற்காக ரூ.550 கோடி ஒதுக்கீடு

ரூ.21.43 கோடி மதிப்பீட்டில் 7,000 ஏக்கரில் மரங்கள் நடப்படும்

வீட்டு வசதித்திட்டங்களுக்காக ரூ.2696 கோடி நிதி ஒதுக்கீடு

2018-19ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் தகவல் தொழிநுட்பத் துறைக்கு ரூ.158 கோடி ஒதுக்கீடு: கிராமங்களை வட்டார தலைமையகத்தோடு கண்ணாடி இழை வட வலையமைப்பு மூலம் இணைக்க ரூ.1230 கோடி

தேசிய ஊரக குடிநீர் திட்டத்துக்காக ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு

100 நாள் வேலைவாய்ப்புத்திட்டத்துக்கு 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழ்நாடு மாநில பெரும்பரப்பு வலையமைப்பு திட்டத்திற்கு ரூ.143 கோடி ஒதுக்கீடு; 11 துறைகளில் ஒற்றை சாளர முறைக்கான இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது

தகவல் தொழில்நுட்பத் துறைக்கு 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.158 கோடி நிதி ஒதுக்கீடு

சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக ரூ.173 கோடி நிதி ஒதுக்கீடு

போக்குவரத்து கழகங்களுக்காக 3000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்

எரிசக்தி துறைக்கு 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.13964 கோடி நிதி ஒதுக்கீடு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் ரூ.50.80 கோடியில் நினைவு மண்டபம்

தமிழ்நாடு மின்தொடர் அமைப்பு மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.673 கோடி ஒதுக்கீடு

எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 660 மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையங்கள் அமைக்கப்படும்

நெடுஞ்சாலை துறைக்கு 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.11073 கோடி நிதி ஒதுக்கீடு

நெல்லை – செங்கோட்டை – கொல்லம் சாலை அகலப்படுத்த ரூ.712 கோடி ஒதுக்கீடு

ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.3800 கோடி ஒதுக்கீடு

தமிழ் மொழி, பண்பாட்டை பாதுகாக்க தஞ்சை பல்கலை.,யில் தமிழ் மொழி விரிவாக்க மையம் உருவாக்கப்படும்; மையத்திற்கு மானியமாக ஆண்டுக்கு ரூ.2 கோடியை தமிழக அரசு வழங்கும்

காவல்துறை உள்கட்டமைப்புக்காக ரூ.217 கோடி ஒதுக்கீடு: இணைய வழி குற்றங்களை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் இணைய வழி குற்றத்தடுப்பு காவல் நிலையம்

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு ரூ.347 கோடி; நீதி நிர்வாகத்துறைக்கு ரூ.1197 கோடி ஒதுக்கீடு; மணலியில் ரூ.18.51 கோடி மதிப்பீட்டில் தீயணைப்பு படை குடியிருப்புகள் அமைக்கப்படும்

26 மாவட்டங்களில் கிராமப்புற புத்தாக்கத் திட்டம் ரூ.920 கோடியில் செயல்படுத்தப்படும்; வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்க ரூ.31 கோடி ஒதுக்கீடு

திறன் மேம்பாட்டு இயக்க நிதி ரூ.150 கோடியிலிருந்து ரூ.200 கோடியாக உயர்த்தப்படும்: வரும் நிதியாண்டில் 3 லட்சம் இலவச வீட்டுமனை பட்டா வழங்க அரசு திட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!