வந்தவாசியில் உலக மகளிர் தின விழா

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர் சார்பில் உலக மகளிர் தின விழா ஆசியன் மெடிக்கல் அகாடமியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை தாங்கினார். அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி செ. பானுமதி, மகளிர் கிளப் நிர்வாகி அ.காயத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஆசிரியர் சதாசிவம் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக, டெல்லி மாதர் சங்க தலைவரும், திருவள்ளுவர் பொறியியல் கல்லூரி தலைவருமான அ. பாலாமணி அருணாசலம் அவர்கள் பங்கேற்று ”  பாரதம் கண்ட புதுமைப் பெண்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மேலும் மாணவிகள் கவிதை, பேச்சுப்போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அகாடமி நிர்வாகி   பீ. ரகமதுல்லா, திருவள்ளுவர் பொறியியல் கல்லூரி ஆங்கில பேராசிரியர் வேதாம்பிகை சரவணன்,   கவிஞர் சு.அகிலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  இறுதியாக ஆசிரியை வசந்தி  நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!