2018-19ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்

💼 2018-19ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உரை

👉 நாடு முழுவதும் அனைத்து ரயில் பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்; எல்லா ரயில் நிலையங்களிலும் WIFI வசதி ஏற்படுத்தப்படும் – அருண் ஜெட்லி

👉 நாடு முழுவதும் 4,267 ஆளில்லா ரயில்வே கேட்கள் மாற்றி அமைக்கப்படும்; 2019க்குள் 4,000 கி.மீ. தூரத்திற்கு புதிய ரயில்வே பாதைகள் அமைக்கப்படும்; நாடு முழுவதும் 3,600 கி.மீ. இருப்புப்பாதைகள் மேம்படுத்தப்படும்

▪சாலை கட்டமைப்பு திட்டங்களுக்காக ரூ.5 லட்சம் கோடி ஒதுக்கீடு
▪எல்லையில் 35,000 கி.மீ. தூர சாலைகளை மேம்படுத்தப்படும்; 10 சுற்றுலா தலங்கள், 110 நினைவிடங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு

▪சிறுநகரங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்து ரூ.2.04 கோடி ஒதுக்கீடு

👉 மகப்பேறு விடுமுறை 12 வாரத்திலிருந்து 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது

👉 பணியில் சேர்ந்த 3 ஆண்டுகளில் வருங்கால வைப்பு நிதியில் பெண்கள் 8% செலுத்தினால் போதும்

👉 டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்காக ரூ.3073 கோடி ஒதுக்கீடு

👉 பெரம்பூரில் ரயில் பெட்டி தயாரிப்பு ஆலை நிறுவப்படும் –

👉 உதான் திட்டத்தின் கீழ் 56 புதிய விமான நிலையங்கள் இணைக்கப்படும்

👉 ரயில்வே திட்டங்களுக்காக ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு

👉 காச நோயாளிகளின் சிகிச்சைக்காக ரூ.600 கோடி ஒதுக்கீடு!

👉 மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று ரூ.80,000 கோடி நிதித்திரட்டத் திட்டம்

👉 70 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்..

👉 தாழ்த்தப்பட்டோர் நலனுக்கு 56,619 ஒதுக்கீடு –

👉 நாடு முழுவதும் 24 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க திட்டம்!
மூன்று நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு மருத்துவ கல்லூரி கட்ட திட்டம்!

👉 உணவு பதப்படுத்துதல் துறைக்கு ரூ.1,400 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு

👉 மோடிகேர் என்ற பெயரில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ திட்டம் செயல்படுத்தப்படும்

👉 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி கடன் வழங்க திட்டம்; வயதான பெண்களுக்காக சமூக பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும்

👉 ஆசிரியர்களுக்கு பயற்சி அளிக்க ஏதுவாக மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்துள்ளது; மலைவாழ் மக்களுக்கு கல்வி அளிப்பதற்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது

👉 கல்விக்கு முக்கியத்துவம் அளித்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது; குழந்தைகள் கல்வியை மேம்படுத்த கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது

👉 சுகாதார சிறப்புத்திட்டத்தின் கீழ் 10 கோடி ஏழைகுடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ஒதுக்கீடு!

👉 “சுயத் தொழில் செய்யும் பெண்களுக்கு தனிக்கடன் வழங்க திட்டம்..!”

👉 நவோதயா பள்ளித்திட்டத்தின்கீழ் புதிய ஏகலைவன் பள்ளிகள் தொடங்கப்படும்

👉 கங்கை நதியை பாதுக்காக்க 1673 கோடியில் 187 திட்டங்கள் தொடங்க அனுமதி!

👉 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்; விவசாயிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.2,000 கோடி ஒதுக்கீடு

👉விவசாய பொருட்களின் விளைப்பொருட்களின் விலையை உயர்த்த திட்டம்

👉விவசாயத்துறையின் வளர்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது; விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டுள்ளன – அருண் ஜெட்லி

👉உற்பத்தி செலவிலிருந்து விவசாயிகளுக்கு ஒன்றரை மடங்கு லாபம் கிடைக்க வழிவகை செய்யப்படும்

👉விளைபொருள் ஏற்றுமதியை ஊக்குவிக்க பிரமாண்ட உணவு பூங்காக்கள் அமைக்கப்படும்

👉விவசாயிகளுக்கு வழங்கப்படும் கிசான் கிரெடிட் கார்ட் போன்று மீனவர்களுக்கும் வழங்கப்படும்

👉8 கோடி பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு
கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான செஸ் வரி 4% அதிகரிப்பு

👉செல்போன் இறக்குமதி சுங்கவரி 15%ல் இருந்து 20% ஆக உயர்வு

👉மூத்த குடிமக்களுக்கான சுகாதார காப்பீடு பிரீமியம் ரூ.50,000 ஆக உயர்வு; எல்.ஐ.சி. முதலீடு ரூ.15 லட்சமாக அதிகரிப்பு

👉தனி நபர் வருமான வரி வரம்பில் மாற்றமில்லை

👉வரி வரம்பில் உள்ள தனிநபர்கள் மருத்துவ செலவினங்கள் மற்றும் போக்குவரத்து செலவினங்கள் கீழ் ரூ.40,000 வரை வரி கழிவு கோர முடியும்

👉 அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் ஆதார் போல தனி அடையாள அட்டை வழங்கப்படும்

👉வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.50 லட்சம் என்பதில் மாற்றமில்லை

👉குடியரசுத் தலைவரின் மாத ஊதியம் ரூ.5 லட்சமாக உயரும். அதேபோல் துணை குடியரசுத் தலைவரின் ஊதியம் ரூ.4 லட்சமாக உயரும்

👉வரி ஏய்ப்பு செய்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது

👉நிரந்தர வரி பிடித்தம் முறை மீண்டும் அமல்

👉விவசாய கூட்டுறவு சங்கங்களுக்கு 100% வருமான வரி விலக்கு

👉85.57 லட்சம் பேர் புதிதாக வருமானவரி தாக்கல் செய்துள்ளனர்; இதன்மூலம் ரூ.90,000 கோடி வருமானம் கிடைத்துள்ளது

👉5 ஆண்டுகளுக்கு ஒரு முறை எம்.பி.க்களின் ஊதியத்தை மாற்றிமைக்க சட்டம் இயற்றப்படும்

👉 ராணுவத் தளவாடங்களை எடுத்துச் செல்ல 2 சிறப்பு சாலைகள் அமைக்கப்படும்

👉 2018-19ம் ஆண்டில் நிதி பற்றாக்குறையை 3.3% ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

👉 பிட்காயின் முதலீடுகள் வருமான வரித்துறை கண்காணிப்பில் கொண்டுவரப்படும்; பாதுகாப்புத் துறையில் தனியார் முதலீடுகள் வரவேற்கப்படுகின்றன:

👉 இந்தியாவில் விமான நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்; புதிதாக 900 விமானங்கள் வாங்க மத்திய அரசு திட்டம்

👉மும்பை அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் விரைவுபடுத்தப்படும்; மும்பையின் போக்குவரத்து மேம்பாட்டிற்கு ரூ.40,000 கோடி ஒதுக்கீடு

👉பாரத் நெட் திட்டம் மூலம் ஒரு லட்சம் கிராமங்களுக்கு இணையதள இணைப்பு

👉 ஒரு மணிநேரம் 51 நிமிடம் மத்திய நிதிநிலை அறிக்கையை வாசித்தார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி

👉 2018-19ம் ஆண்டிற்கான பட்ஜெட் உரை முடிந்ததை அடுத்து வரும் திங்கட் கிழமைக்கு அவையை ஒத்திவைப்பு!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!