திராவிட இயக்கத்தை அழிக்க நினைப்போர் தோற்பர்- ஸ்டாலின்

திராவிட இயக்கத்தை அழிக்க முயற்சித்து பலர் தோற்ற வரலாறு அனைவருக்கும் தெரியும் ஸ்டாலின் பேட்டி

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். சந்திப்பை தொடர்ந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியார்களிடம் கூறியதாவது:

கருணாநிதியுடன், ரஜினிகாந்த் சந்திப்பது ஆச்சரியப்படும் விஷயம் அல்ல. சந்திப்பின்போது அரசியல் கட்சி தொடங்குவதற்கு ஆசி பெற வந்ததாக ரஜினி தெரிவித்தார்.

திராவிட இயக்கத்தை அழிக்க முயற்சித்து பலர் தோற்ற வரலாறு அனைவருக்கும் தெரியும். பெரியார், அண்ணா, கருணாநிதியால் பண்படுத்தப்பட்ட மண் தமிழகம்.

அரசியல் பண்பாடு, நாகரிகத்தின் அடிப்படையில் கருணாநிதி இன்முகத்தோடு வாழ்த்தியிருக்கலாம். புதிய கட்சி தொடங்கும் போது விஜயகாந்தும் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றார்.

திமுகவின் ஆதரவு ரஜினிக்கு தேவையா என்பது பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். வீட்டிற்கு வருவோரை இன்முகத்தோடு வரவேற்பது தமிழர் பண்பாடு என்ற முறையில் ரஜினியை வரவேற்றோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!