உரிமமின்றி உணவு பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு தடை சட்டப்படி நடவடிக்கை-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

இதுக்குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006–ன் படி உணவு வணிகம் மேற்கொள்பவர்கள் பதிவு சான்று மற்றும் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் தரமான, பாதுகாப்பான உணவு கிடைக்க, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006 நடைமுறையில் உள்ளது.

இதில் திருத்தம் செய்யப்பட்டு 2011 முதல், பதிவு மற்றும் உரிமங்களை உணவு பாதுகாப்புத் துறை வழங்குகிறது. போதுமான கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் பதிவு மற்றும் உரிமம் பெறாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். வருகிற 1–ந் தேதிக்கு மேல் பதிவோ, உரிமமின்றி உணவு பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து உணவு பொருள் விற்பனை செய்பவர், சேமிப்பவர், விநியோகம் செய்பவர், மொத்த விற்பனையாளர், தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் செயல்படும் உணவகங்கள், டீக்கடைகள், மீன், கோழி, ஆடு, மாட்டு இறைச்சி கடைகள், மளிகை கடைகள், அரசால் இயக்கப்படும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து உணவு மையங்கள் போன்ற உணவு வணிகம் செய்யும் அனைவரும் உரிமம் மற்றும் பதிவுச்சான்று அந்தந்த தொழிலின் வருடாந்திர வர்த்தகம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.12 லட்சத்திற்கு கீழ் விற்று முதல் உடையோர் பதிவும், ரூ.12 லட்சத்திற்கும் மேல் ரூ.20 கோடிக்குள் விற்று முதல் உடையோருக்கு மாநில உரிமம், ரூ.20 கோடிக்கு மேல் விற்று முதல் உடையோருக்கு மத்திய உரிமம் பெறுவதற்கு www.fssai.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் மற்றும் இ–சேவை மையத்தின் மூலமாகவும் விண்ணப்பித்து உரிமம் பெறலாம்.

மேலும் உரிமம் பெறுவதற்கு நியமன அலுவலரிடமும், பதிவுச்சான்று பெறுவதற்கு உணவுப்பாதுகாப்பு அலுவலரிடமும் விண்ணப்பிக்க அறிவிக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் நியமன அலுவலரையோ அல்லது சம்பந்தப்பட்ட வட்டார உணவு பாதுகாப்பு அலுவலரையோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!