வந்தவாசி அடுத்த எச்சூரில் 2 பேருந்துகள் நேருக்குநேர் மோதியதில் அரசு பேருந்து ஓட்டுநனர் உட்பட 3 பேர் பலி, 40 பேர் படுகாயம்

வந்தவாசி அருகே எச்சூரில் நேற்று காலை அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதியதில் அரசு பேருந்து ஓட்டுநனர் உட்பட 3 பேர் இறந்தனர். 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்தில் விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநனர் மதியழகன், செய்யாறு அடுத்த பைங்கிணறு தாமோதரன்(70), ஆற்காடு சுவாமிவேலு (எ) வேலுச்சாமி (53) ஆகியோர் இறந்தனர்.

மேலும் இந்த விபத்தில் தனியார் பேருந்து ஓட்டுநனர் துளசிராமன் (28), நடத்துனர் புருசோத்தமன் (27), திண்டிவனம் அரசு கல்லூரி முதல்வர் இளங்கோவன் (57), குப்பன் (60), பாபு (50), சம்பத் (65), ரவி (45), பெருமாள் (42), விநாயகம் (41), தணிகைமலை (37), சுகன்யா (40), செல்லா (36), துரைசாமி (27), ரமிஜா (35), பிரகாஷ் (24), வந்தவாசி அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-1 மாணவி விஜயலட்சமி (16), வந்தவாசி நகராட்சி வயர்மேன் வேலுச்சாமி (47) உள்பட 40 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 40 பேர் வந்தவாசி, செய்யாறு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்நிலையில் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தனசபாபதி, செய்யாறு உதவி கலெக்டர் கிருபானந்தன் ஆகியோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

இதுகுறித்து அனக்காவூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!