வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச்சங்கம் சார்பில் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா

வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச்சங்கம் சார்பில் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு “பாரதி கண்ட பாரதம் ” என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்வு எஸ். ஆர். எம் கணினி மையத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்க தலைவர் அ.மு.உசேன் அவர்கள் தலைமை தாங்கினார். தமிழ்ச் சங்க பொருளாளர் எ.தேவா வரவேற்றார். வந்தவாசி தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி கிளை மேலாளர் திரு. ராஜன் பாபு, திருமதி. நவீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

“பாரதியின் பார்வையில்” என்ற தலைப்பில் சங்க ஆலோசகர் கவிஞர் மு. முருகேஷ், சங்க செயலாளர் பா.சீனிவாசன், துணைதலைவர் ம.சுரேஷ் , செயற்குழு உறுப்பினர் சதாசிவம், சமூக சேவகர் கேசவராஜ் ஆகியோர் கவிதை வாசித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக, பட்டிமன்ற பேச்சாளர் புலவர் நேமி. பாஸ்கரதாஸ் அவர்கள் பங்கேற்று, “பாரதி கண்ட பாரதம்” என்ற தலைப்பில் பேசினார். பாரதியாரின் பிறப்பு முதல் பாரத நாட்டிற்கு அவர் விட்டுச் சென்ற அவரின் பங்களிப்பு பற்றி விவரித்து பேசினார். மேலும் பள்ளி மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் நிறைவில் முதுகலைஆசிரியர் பூபாலன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!