திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க டிசம்பர் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில், 1.1.2018ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் பெயரை சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய விண்ணப்பங்கள் பெற கடந்த அக்டோபர் 3ம் தேதி முதல் 30ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் 15ம் தேதி வரை விண்ணப்பங்களை பெறலாம் என தேர்தல் ஆணையம் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. எனவே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6ம், இறந்த நபர்கள் மற்றும் நிரந்தரமாக வெளியூர் சென்ற நபர்களின் பெயர்களை நீக்க படிவம் 7ம், விவரங்களை திருத்தம் செய்ய படிவம்8ம், ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் இடம் பெயர்ந்தவர்கள் படிவம் 8ஏ ஆகியவற்றை இலவசமாக பெற்று, உரிய ஆவணங்களுடன் அளிக்கலாம்.

வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வீடு, வீடாக வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமோ அல்லது தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம் ஆகியவற்றிலும் விண்ணப்பங்களை அளிக்கலாம். வீடு, வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்க வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலவர்கள், வாக்காளர் தொடர்பான விவரங்களை படிவத்திலோ அல்லது ஆன்ட்ராய்டு மொபைல் போன் மூலமோ நிரப்புவதற்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும், தேர்தல் ஆணயத்தின் இணையதளத்திலும், பெயர் சேர்த்தல், நீத்தம், திருத்தம் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம், இறுதி வாக்காளர் பட்டியல், அடுத்த மாதம் 10ம் தேதி வெளியிடப்படும். இந்த வாய்ப்பை வாக்காளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!