வந்தவாசியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர் சிறப்பு நிகழ்வை அம்மையப்பட்டு BRC மையத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மையத்தில் நிகழ்த்தியது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் திரு. இராகவன் மற்றும் அம்மையப்பட்டு ஊ.ஒ.நநி.பள்ளி தலைமை ஆசிரியர் திரு. ஜோதிபாபு அவர்கள் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தென்னாங்கூர் ஞானாநந்தகிரி பீடம் பூஜ்யஸ்ரீ நிரஞ்சனாநந்தகிரி ஸ்வாமிகள் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகள் மாணவர்களுக்கு ஆசியுரை வழங்கினார். மேலும் மரக்கன்றுகள் நட்டு, பரிசுப் பொருட்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!