வந்தவாசி  வெண்குன்றம் மலைக்கோவிலில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக கிரில் அமைப்பு

வந்தவாசி  வெண்குன்றம்  தவளகிரீஸ்வர் கோயில்களில் சுற்றுப்பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக கிரில் அமைக்கப்பட்டது. ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழாவிற்கு கோயிலுக்கு வரும் பக்தர்கள் உச்சி மலைக்கு செல்லும் வழியில் இரண்டு பக்கமும் கம்பி இல்லாமல் பக்தர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது.

இதனால் குறிப்பிட்ட 50 மீட்டர் துரத்திற்கு இரண்டு பகுதியிலும் காவல்துறையினர் கயிறு கட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இந்த பகுதியில் கிரில், பக்தர்கள் தங்க ஓய்வறை கட்டவும், சுற்றுலா துறை கடந்த 2 ஆண்டுக்கு முன்பு ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்தது. 1600 அடி உயரம் உள்ள மலை  உச்சியில் கிரில் அமைக்க இரும்பு ராடுகளை எடுத்து செல்ல தாமதம் ஆனதால் இப்பணி கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கிடப்பில் இருந்தது. தற்போது கிரில் அமைக்கும் பணி முடிந்து விட்டது. இதனால் மலை மீது உள்ள கோயிலை சுற்றி இரும்பு கிரில் அழகாவும், பக்தர்களுக்கு பாதுகாப்பாகவும் உள்ளது. இதனால் மலை உச்சியில் ஏறும் பக்தர்கள் பாதுகாப்புடன் மலை உச்சியில் இருந்து சுற்றியுள்ள பகுதிகளின் இயற்கை எழில்களை ரசிப்பதுடன் சிறுவர்களுடன் பாதுகாப்புடன் மலை மீது செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!