கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தீபத்திருவிழாவிற்கு வருகை தர உள்ள பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் பாரிந்துரையினை ஏற்று, இந்திய ரெயில்வே துறையின் தென்னக பிரிவு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரெயில் இயக்கத்தினை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். சிறப்பு ரெயில் 1 மற்றும் 2-ந் தேதி விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது.

சிறப்பு ரெயில் 1-ந் தேதி காலை 10.15 மணிக்கு புறப்பட்டு வெங்கடேசபுரம், தெளி, மாம்பழப்பட்டு, அயன்தூர், முகையூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக பகல் 12 மணிக்கு திருவண்ணாமலை ரெயில் நிலையத்திற்கு வந்தடையும்.

அந்த ரெயில் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு தண்டரை, அண்டம்பள்ளம், ஆதிச்சனூர், திருக்கோவிலூர், முகையூர், அயன்தூர், மாம்பழப்பட்டு, தெளி, வெங்கடேசபுரம் வழியாக விழுப்புரம் சந்திப்பை பிற்பகல் 3.15 மணி சென்றடையும்.

அதை போல் விழுப்புரம் சந்திப்பில் இருந்த இரவு 10 மணிக்கு புறப்பட்டு வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, திருக்கோவிலூர், தண்டரை வழியாக திருவண்ணாமலைக்கு இரவு 11.30 மணிக்கு வந்தடையும்.
அதே ரெயில் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் இருந்து 2-ந் தேதி அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு தண்டரை, திருக்கோவிலூர், மாம்பழப்பட்டு, வெங்கடேசபுரம் வழியாக விழுப்புரம் சந்திப்பை சென்றடையும். 3-ந் தேதி இதே நேரத்தில் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.

மேலும் திருநெல்வேலி சந்திப்பில் இருந்து 1-ந் தேதி மாலை 5 மணிக்கு புறப்பட்டு வாஞ்சிமணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, விருத்தாசலம், விழுப்புரம், திருக்கோவிலூர் வழியாக திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை மறுநாள் காலை 7 மணிக்கு வந்தடையும்,

அந்த ரெயில் 2-ந் தேதி இரவு 11.30 மணிக்கு திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு திருக்கோவிலூர், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி வழியாக திருநெல்வேலி சந்திப்பு 3-ந் தேதி பகல் 11.45 மணிக்கு சென்றடையும்.

திருநெல்வேலி சந்திப்பில் இருந்து 3-ந் தேதி மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை எழும்பூர் சந்திப்பை 4-ந் தேதி காலை 9 மணிக்கு சென்று அடையும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!