மகா தீபம் ஏற்றப்படும் கொப்பரை, மாட வீதியில் வலம் கொண்டு வரப்பட்டு பூஜை

அருணாசலேசுவரர் கோவிலில், மஹா தீபம் ஏற்றப்படும் கொப்பரை, மாட வீதியில் வலம் கொண்டு வரப்பட்டு பூஜை செய்யப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் தீப திருவிழாவில், டிச.,2 அதிகாலை, 4:00 மணிக்கு, கோவில் கருவறை எதிரில், ஏகன் அனேகன் என்பதை விளக்க பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இதற்காக, ஐந்தடி உயரமுள்ள ராட்சத கொப்பரை புதுப்பிக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்றப்படும் மஹா தீபம், 40கி.மீ தூரம் வரை பார்க்க முடியும். இதனால், இந்த கொப்பரை, தீபம் ஏற்றும் போது வெப்பத்தால் சேதமடையாமல் இருக்க, மேல்பாகம், மூன்றே முக்கால் அடி, கீழ்பாகம், இரண்டே முக்கால் அடி சுற்றளவில், 150 கிலோ எடையில், கால் இன்ச் தடிமனுடன், 20 வளைய ராடுகளுடன் கூடிய செப்பு தகட்டில் செய்யப்பட்டுள்ளது. இந்த கொப்பரை புதுப்பிக்கப்பட்டு, காவி நிற வண்ணம் பூசப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இது, நேற்று அருணாசலேசுவரர், உண்ணாமுலையம்மன் சன்னதியில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மாட வீதியில் வலம் கொண்டு வரப்பட்டது. இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!