வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் குழந்தைகள் தினவிழா

வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் குழந்தைகள் தினவிழா மற்றும் மாறுவேடப்போட்டிகள் வந்தவாசி வீனஸ் வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு தமிழ்ச் சங்க தலைவர் திரு அ.மு. உசேன் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகி கௌசல்யா பார்த்தசாரதி அவர்கள் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் திரு. ரமேஷ் கண்ணா அவர்கள் வரவேற்பு நிகழ்த்தினார்.
சிறப்பு அழைப்பாளராக, ஓய்வுபெற்ற மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எஸ். குமார் அவர்கள் பங்கேற்று, மாணவ….மாணவிகளை பாராட்டி பரிசுகள் மற்றும் விருதுகளை வழங்கினார். தமிழ்ச் சங்க செயலாளர் பா. சீனிவாசன், சங்க ஆலோசகர் கவிஞர் மு.முருகேஷ் , வந்தை பிரேம், ஒருங்கிணைப்பாளர் பெ.பார்த்திபன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவின் இறுதியில் சங்க பொருளாளர் எ.தேவா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!