சுவாமி விவேகானந்தரின் சீடர் சகோதரி நிவேதிதா 150 ஆவது ஜெயந்தி விழா

வேகானந்தரின் முதன்மையான பெண் சீடர் சகோதரி நிவேதிதா அவர்கள். அவருடைய 150 ஆவது ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் ஸ்ரீபாரதமாதா பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியின் இயக்குநர் தெள்ளாறு திரு. இராமநாதன்ஜீ தலைமை வகித்தார். திருவண்ணாமலை சுவாமி விவேகானந்தா மிஷின் செயலர் எஸ். ஜெயராஜ் வரவேற்பு நிகழ்த்தினார். ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன்,பள்ளியின் தாளாளர் திரு. செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக சிவகாசியில் உள்ள தமிழ்நாடு நிவேதிதா பேரவையின் நிர்வாகி எஸ். பானு நிவேதிதா அவர்கள் பங்கேற்று , பாரதியாரே தனது மானசீக குரு சகோதரி நிவேதிதா தான் என்று கூறியுள்ளார் என்பதை அவரது நூல்களை ஆதாரம் காட்டி விளக்கினார். மேலும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அவசியம் என்பதை பற்றியும் பேசினார். மாணவ…மாணவிகளுக்கு சகோதரி நிவேதிதா வாழ்க்கை வரலாற்று நூல்களை வழங்கினார். இதில் விவேகானந்தா தொண்டு மைய பொறுப்பாளர்கள் சுரேஷ்பாபு, சதாசிவம், சுப்பராயலு ஆகியோர் பங்கேற்றனர். இறுதியில் பள்ளியின் முதல்வர் முத்து அவர்கள் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!