வந்தவாசி ரெட்கிராஸ் சங்கம் சார்பில் மாணவர்களுக்கான டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வந்தவாசி ரெட்கிராஸ் சங்கம் சார்பில் மாணவர்களுக்கான டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வந்தவாசி ரெட்கிராஸ் சங்க தலைவர் மு. ரமணன் தலைமை வகித்தார். சங்க பொருளாளர் திரு. எ. விஜயன் முன்னிலை வகித்தார். ரெட்கிராஸ் சங்க செயலாளர் பா.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, மாவட்ட ரெட்கிராஸ் சங்க தலைவர் திரு பா. இந்திரராஜன் அவர்கள் பங்கேற்று, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கருத்துகளை மாணவர்களுக்கு விளக்கினார். மேலும் டெங்கு குறித்த தகவல்கள் அடங்கிய பிரசுரங்கள் வழங்கப்பட்டது. முன்னாள் நகரமன்ற உறுப்பினர் அ.மு.உசேன் , ஆசிரியர்கள் ராஜா, செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர். சங்க துணைத் தலைவர் இரா. சரவணன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!