வந்தவாசி அடுத்த தென்எலப்பாக்கம் பள்ளியில் "குறள் காட்டிய வழி" சிறப்பு உரையரங்கம்

வந்தவாசி அடுத்த தென்எலப்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசினர் உயர் நிலைப் பள்ளியில் “குறள் காட்டிய வழி” என்ற தலைப்பில் மாணவர்களுக்கான சிறப்பு உரையரங்கம் நடைபெற்றது. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. வெங்கடேசன் அவர்கள் தலைமை வகித்தார். பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் தியாகராஜன் வரவேற்றார். ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையத்தின் நிறுவனர் பாவலர் ப. குப்பன் அவர்கள் பங்கேற்று, ‘குறள் காட்டிய வழி ” என்ற தலைப்பில் பேசினார். மாணவர்கள் நல்லொழுக்கம் மிக்கவர்களாக திகழவும், வாழ்க்கை முறைகளை பின்பற்றி வாழவும், மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்ற இலக்கணத்தை காட்டுவதே திருக்குறள் என்று பேசினார். மேலும் தென் எலப்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு எஸ். எஸ். வாசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மாணவ….மாணவிகளின் பேச்சுப் போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!