இரும்பேடு பள்ளியில் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

வந்தவாசி அடுத்த இரும்பேடு அ.மே.நி.பள்ளியில் ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர் மற்றும் SET IF பவுண்டேஷன் இணைந்து நடத்திய ” கற்க கசடற ” மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் திரு. சேகர் அவர்கள் தலைமை வகித்தார். ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், செட் இஃப் தொண்டு மைய நிர்வாகி திரு கேசவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக புலவர் நேமி. பாஸ்கரதாஸ் அவர்கள் பங்கேற்று “கற்க கசடற” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
மேலும் சுவாமி விவேகானந்தா தொண்டு மையம் நிர்வாகி ம.சுரேஷ்பாபு , உதவி தலைமை ஆசிரியர் மோகன்தாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சமூக ஆர்வலர் அகிலன் அவர்களின் “கல்விசார் விழிப்புணர்வு பாடல்கள் ” நடைபெற்றது. மேலும் மாணவ…மாணவிகள் உறுதி மொழி எடுத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!