வந்தவாசியில் பரவலாக மழை
கடந்த சில நாட்களாக வந்தவாசி மற்றும் அதன் சுற்றுவாட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி குளம் குட்டைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை வந்தவாசியில் 8.30 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. போளுர் 41.20 மி.மி, திருவண்ணாமலை 3.20 மி.மீ, ஆரணி 15.40 மி.மீ, செய்யார் 32 மி.மீ.