வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா

வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 109 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு “அண்ணாவும் தமிழும” என்ற தலைப்பில் சிறப்பு கவியரங்கம் ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்றது. தமிழ்ச் சங்க தலைவர் அ.மு.உசேன் அவர்கள் தலைமை வகித்தார். ராமகிருஷ்ணா மடம் சிறப்பாசிரியர் சச்சிதானந்தம் அவர்கள் முன்னிலை வகித்தார். தமிழ்ச் சங்க செயலாளர் பா. சீனிவாசன் வரவேற்பு நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியின் இயக்குநர் திரு எஸ். அப்பாண்டைராஜன் அவர்கள் கலந்துகொண்டு” அண்ணா காட்டிய வழி” என்ற தலைப்பில் உரையாற்றினார். சங்க நிர்வாகிகள் கார்த்திகேயன், வந்தை குமரன், மோகன்தாஸ் ஆகியோர் கவிதை வாசித்தனர். முதுகலை ஆசிரியர்கள் க.முருகன், க.பூபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர். பொருளர் எ.தேவா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!