கூத்து கலையை கற்க விரும்புபவரா நீங்கள்?… உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு!
கூத்து கலையை கற்க விரும்புபவரா நீங்கள்?… உண்மையில் நீங்கள் கூத்தைக் கற்று ஆட விருப்பம் என்றால், இதோ உங்களுக்கான ஓர் #அரிய_வாய்ப்பு!
பாரம்பரிய #புரிசைக்_கூத்து பயிற்சி இரண்டு நாட்களில் புரிசையில் துவங்கவுள்ளது.. புரிசை கிராமம் செய்யாறு நகரிலிருந்து வந்தவாசி செல்லும் வழியில் அமைந்துள்ளது(தி.மலை மாவட்டம்). வருடந்தோறும் நடைபெறும் இக்குறுகிய காலப் பயிற்சி, தங்கிக் கற்றுக் கொள்ளும் வசதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயிற்சியின் போது உணவும் தங்குமிடமும் உண்டு.
பயிற்சி நாட்கள்: செப் 8 முதல் 28 வரை.
பயிற்சிக் கட்டணம் ரூ.15000/-
20 நாட்கள் காலை மாலை இருவேளையும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சிக்குப் பின் அரங்கேற்றம் நிகழ்த்தி சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சி அளிப்பவர்: கலைமாமணி புரிசை #கண்ணப்ப_சம்பந்தன்ஐயா அவர்கள்.
தொடர்புக்கு அழைக்கவும்: 95661 71624, 94861 71771.
குறிப்பு: ஆண், பெண் இரு பாலருக்கும் வாய்ப்புண்டு