வந்தவாசி ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

வந்தவாசி ஒன்றியம் செம்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பி.என்.அன்பழகன் உட்பட தமிழகத்தை சேர்ந்த 22 பேர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். . ஒவ்வொரு ஆண்டும் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.   2017ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதும் 374 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியம் செம்பூர் கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பி.என்.அன்பழகன் உட்பட 22 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பி.என்.அன்பழகன் வந்தவாசி அடுத்த உளுந்தை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக கடந்த 1984ம் ஆண்டு அன்பழகன் பணியில் சேர்ந்தார். இதனை தொடர்ந்து 2003ம் ஆண்டு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று, சாத்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணிபுரிந்தார். பின்னர், 2014ம் ஆண்டு இளங்காடு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்த இவருக்கு தமிழக அரசு சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!