வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறப்பு புதுப்பித்தல் சலுகை

வேலைவாய்ப்பு பதிவை 2011 ம் ஆண்டிலிருந்து புதுப்பிக்காதவர்களுக்கு வரும் நவம்பர் 21-க்குள் ஆன்லைன் அல்லது வேலைவாய்ப்பு அலுவலகம் சென்று புதுப்பிக்கலாம்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் – 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

01.01.2011 முதல் 31.12.2015 முடிய உள்ள காலத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சலுகையில் புதுபிக்க அரசாணை வெளியிட பட்டுள்ளது. 22.08.2017 முதல் 21.11.2017 முடிய (90 நாட்கள்) இச்சலுகையை பயன்படுத்தலாம் .
https://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி புதுபித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகவேண்டிய அவசியம் இல்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!