திருவண்ணாமலை பவுர்ணமிக்கு கிரிவலம் வர உகந்த நேரம்

திருவண்ணாமலையில், பவுர்ணமிதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வர். ஆடி மாத பவுர்ணமி வரும், 6 அன்று இரவு, 11:31 மணிக்கு தொடங்கி மறுநாள், 7ல், நள்ளிரவு, 12:02 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம். இந்நிலையில், 7 இரவு, 10:52 மணிக்கு சந்திரகிரகணம் தொடங்கி நள்ளிரவு, 12:48 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில், பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். சந்திரகிரகண நேரத்தில் சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் எதுவும் நடக்காது. நள்ளிரவு, 12:49 மணிக்கு மேல், கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடக்கும் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!