அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு உரையரங்கம்

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர் டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல்கலாம் அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ” ஆகலாம் கலாம் ” என்ற சிறப்பு உரையரங்கம் மற்றும் மாணவர்களுக்கான ஓவியம், பேச்சு, கவிதை போட்டிகள் நடத்தி பரிசுகளும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை வகித்தார். ஆசிரியர் பூபாலன் வரவேற்றார்.
வெளியம்பாக்கம் அ.உ.நி.பள்ளி பட்டதாரி ஆசிரியர் திரு. சிவச்சுந்தரம் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் செல்வராஜ், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் திரு. தர்மதுரை அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். மாணவர்கள் அப்துல்கலாம் அவர்களின் படத்திற்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர். ஆசிரியை ரேவதி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!