வந்தவாசி தேரடியில் திமுகவினர் மறியல்

சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க ஸ்டாலின் தலைமை செயலகம் எதிரே உள்ள ராஜாஜி சாலையில் மறியலில் ஈடுபட்டார். அவருடன் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டணி கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் திமுகவிரை கைது செய்தனர்.

இதையறிந்த திமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வந்தவாசி தொகுதியில், வந்தவாசி தேரடியில் மாவட்ட துணை செயலாளர் திரு.M.S.தரணிவேந்தன் அவர்கள் தலைமையில் மறியல் திமுகாவினர் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!