உலக சுற்றுச்சூழல் தின விழா

ஜுன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர் ” நாமும் சுற்றுச்சூழலும் ” சிறப்பு கருத்தரங்கம் மற்றும் 101 மரக்கன்றுகள் மாணவ…மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் ஸ்ரீகிருஷ்ணா பயிற்சி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக, வந்தவாசி TMB வங்கியின் மேலாளர் திரு.ராஜன் பாபு மற்றும் வந்தவாசியின் முன்னாள் நகரமன்ற தலைவர் திரு அன்னை க. சீனிவாசன் ஆகியோர் பங்கேற்று, “நாமும் சுற்றுச்சூழலும் ” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி ஆசிரியர் எம். எஸ். கார்த்திகேயன், யுரேகா கல்வி திட்டத்தின் மேற்பார்வையாளர் க.முருகன் , ஸ்ரீகிருஷ்ணா பயிற்சி மையத்தின் முதுகலை ஆசிரியர்கள் பூபாலன், ல.செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளி மாணவ…மாணவிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!