திருவண்ணாமலை மாவட்டத்தில் உணவு பொருட்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க‘வாட்ஸ் அப்’எண் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உணவு பொருட்கள் தொடர்பான புகார்களை 94440 42322 என்ற ‘வாட்ஸ் அப்’ எண்ணில் தெரிவிக்கலாம் என கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
புற்றுநோய் அபாயம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓட்டல்கள், டீக்கடை மற்றும் பேக்கரி கடைகளில் சமைத்த உணவு பொருட்களை பொட்டலமிட செய்திதாள்களை பயன்படுத்துகின்றனர். செய்திதாளில் உள்ள மையில் காணப்படும் காரீயம், காட்மியம் போன்ற ரசாயன பொருட்கள் உணவு பொருட்களில் கலந்து புற்றுநோய், கல்லீரல் மற்றும் மூளை நரம்பு பாதிப்புகள், செரிமான குறைபாடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. செய்திதாள்களில் பொட்டலம் மடிப்பதை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை செய்துள்ளது.

உணவு பொருட்களை வாழை இலை, பாக்கு இலை, தேக்கு இலை உள்ளிட்ட இயற்கை மற்றும் எளிதில் மக்கக்கூடிய பொருட்களில் பொட்டலமிட்டு வழங்க வேண்டும்.

அதேபோல் டீ, பால், சாம்பார், ரசம் உள்ளிட்ட உணவு பொருட்களை பாலித்தீன் கவர்களில் வழங்க கூடாது. இதுபோன்று உணவுப்பொருட்கள் வழங்கினால் பாலித்தீன் கவர்களில் இருந்து புற்றுநோய் வரும் ஆபத்து உள்ளது.
‘வாட்ஸ் அப்’ எண்

எனவே, செய்திதாள் மற்றும் பாலித்தின் கவர்களில் உணவு பொருட்களை பொட்டலமிட்டு வழங்க கூடாது. இதனை மீறி வழங்கினால் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். உணவு பொருட்கள் தொடர்பான புகார்களை பொது மக்கள் 94440 42322 என்ற ‘வாட்ஸ் அப்’ எண்ணில் தெரிவிக்கலாம்.

வணிகர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெறுவதற்கு www.fssai.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும், இ–சேவை மையத்தின் மூலமாகவும் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!